Wednesday 8 October 2014

சிவகங்கை கதை - பாகம் 1

சிவகங்கையின் வீரர்களான மருது சகோதர்கள் பற்றிய சில குறிப்புகள்....மற்றும் அவர்களுக்கு எதிரானா ஐந்து மாத போரில் நடத்தவை நாள் குறிப்புகளாக (daily dairy ) என்னால் முன்பே வாசிக்கப்பட்டு , அவர்களுடன் நேரில் பழகிய Colonel Welsh, எழுதிய குறிப்புகள் ..

இவைகள் அனைத்தும் காளையார்கோவில் கோபுர நெருப்பு காட்சி என் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணி என்னை எழுத வைத்து விட்டது /







சினிமாவில் எப்பிடி கிராமத்து கதை என்றால் வயல்வெளி சிறு கோவில் காண்பித்து கதை ஆரம்பித்து சொல்வார்களோ அதே போல .. மருது சகோதர்கள் கதை சொல்வதற்கு முன் .. 18 நூற்றாண்டில் அரசியல் எப்படி இருந்தது என்று சொல்லிவிட்டு எழுதுவோம் ..

சரித்திரம் என்றாலே சேர சோழ பாண்டியர்கள் என்ற நாம் பழக்கப்பட்டு விட்டோம் .. ஆனால் அவங்கள் எல்லாம் 1200-1300 CE காலத்திலேயே காணமல் போய் விட்டாங்க .. விஜய நகர சாம்ராஜிய அரசர்கள் ஆண்ட போது அவர்கள் படை தளபதிகளாக இருந்த நாயக்கர்கள் .. மதுரை பாண்டிய ராஜா வாரிசு இல்லாததால் தாங்களே அரசர்களாக முடி சூட்டிக்கொண்டு .. அவர்கள் சொந்தக்காரகளை கும்பலாக கூட்டிகொண்டு வந்து அவர்களுக்கு பல இடங்களை தனி உரிமைகளாக ஆள அனுமதி அளித்து .. சண்டை வரும்போது படைபலம் (அப்போ ஆள் பலம் தேவை !!) அனுப்ப பணித்து ... உருவாக்கியவை .. பாளையங்கள் ...
(more likes districts with indipendant charge of collecting revenues and also raising their own army)

இப்படி உண்டான பாளையங்களில் ராமநாதபுரம் அரசும் உண்டு .. ஆயின இவர்கள் தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் ... இவர்கள் சேதுபதி என்று அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள் .. ராமர் கட்டிய பலத்தை காப்பவர்கள் என்று பொருள் படும் படியாக ..தமிழகத்திலே நாயக்கர் காலத்திற்கு முன்பே ஆண்டு வரும் அரச குடும்பம் இவர்களது ..

1540CE இல் நாயக மன்னர்களால் ஒரு சேதுபதி அரசன் கைது செய்யப்பட்டு ஸ்ரீரங்கத்தில் சிறை வைக்கப்பட்டான் .. முன்பெல்லாம் வட நாட்டு யாத்ரீகர்கள் ஸ்ரீரங்கம் வந்து விட்டு ராமநாதபுர அரசனை வணங்கி விட்டு ராமேஸ்வரம் செல்வார்கள் .. அந்த அரசன் ஸ்ரீரங்கத்தில் சிறை வைக்கப்பட்டு இருந்தமை தெரிந்ததால் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் தங்க ஆரம்பித்து விட்டனர் .. சுமார் 50-60000 பயணிகள் ஸ்ரீரங்கத்தில் தங்கினால் !! நாயக்க மன்னன சேதுபதி அரசனை விடுவித்து அவன் நாட்டுக்கு அனுப்பினான் என்று குறிப்புகள் சொல்லுகின்றன ..

இப்படி இருந்த ராமநாதபுர சமஸ்தானம் இரண்டாக பிரிந்து .. சிவகங்கை சமஸ்தானமாக உருவெடுத்தது ...

கிழவன் சேதுபதி (இவர் மிகப்புகழ் வாய்ந்த ராமநாத புர அரசன் ) சகோதரி மகன் ரகுநாத சேதுபதி .. இவரின் இன்னொரு மனைவின் மகன் (வெள்ளைக்கார பய எழுதறான் முறைதவறி பிறந்தவன் என்று ..அவர்களுக்கு அப்போ பலதார மணம் பற்றிய எண்ணம் அவ்வளவே ..இவைதான் ராமநாதபுர ராஜாவை அன்று  கிருத்துவனாக மாற்ற முடியவில்லை .. பலமண தார தடை இருந்த காலம்  ..அது அன்று குடிபடைகளை அதிகரிக்கும் .. அரசன் பல ஊர் குடிகளில் பெண் எடுத்து ஆள் பலம் சேர்க்க !! இதை பற்றி வேறு இடத்தில் பார்ப்போம் . 

பவானி சங்கர தேவன்..ஆரம்பித்து வைத்த சொத்து தகராறு .. சிவகங்கை தனி சமஸ்தானமாக பிரிந்தது ..

முத்துவடுகநாத பெரிய உடைய தேவர் .....இவர் ஆட்சி காலத்தில் .. மைசூர் திப்பு படைகள், அன்றைய முழு தமிழகத்தையும் ஆண்டு கொண்டு இருந்த ஆற்காடு நவாப் உடன் சண்டை இட்டுக்கொண்டு இருந்தன... இவர் திப்புவுடன் சேர்ந்து கொண்டு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்தார் .. விளைவு ..நவாப் அன்று ஆங்கிலேயருக்கு அடிமையாய் இருந்த நேரம் .. அவர்கள் துணை கொண்டு தேவரை பீரங்கியில் வைத்து சிதறி அடித்தனர் ...



   இவரின் மனைவியே வேலுநாச்சியார் ... இவர் தனது மகள் உடன் திருப்பாச்சி என்கிற ஊரில் ..திப்புவின் படைகள் ஆதரவுடன் இருக்க சென்ற போது அவர்கள் உடன் சென்றவர்களே .. மருது சகோதர்கள் ...

நாமும் இவர்களுடன் பயணத்தை தொடர்வோம் .....


No comments:

Post a Comment