Saturday 11 October 2014

மருது சகோதர்கள் சரித்திரம் பாகம் - 2



சிவகங்கை பற்றி மேலும் சில குறிப்புகளை பார்ப்போம் ...

நாம் முன்பே பார்த்த பாளையக்காரர்கள் அனைவரும் தெலுங்கு நாயக்கர்களாகவும் , மறவர் நாடு என சொல்லப்பட்ட ராமநாதபுரம் மட்டும் முக்குலத்தோர் குடியை சேர்ந்த அரசர்களால் ஆளப்பட்டமை தெரிகிறது .. அதில் இருந்து 1733 உண்டான சாசனப்படி பிரிந்து வந்த பாளையமே சிவகங்கை ..

இவர்களது காளையார்கோவில் கோட்டை சுமார் நாற்பது மைல் சுற்றளவுக்கு அடர்ந்த காடுகளை உடையதாகவும் எளிதில் அணுக முடியாத அடர்த்தியாக இருந்தாகவும் சுமார் 12,000 காலாட்படை வீர்கள் உடையதாகவும், சுமார் 500,000 ரூபாய் வருமானமும் , 175,000 ரூபாய் ஆற்காடு நவாப்பிற்கு வரியும் கட்டுகிறதாகவும்
Colone Fullarton தனது குறிப்பில் சொல்லுகிறார் ..

மருது சகோதர்கள் .. அன்றைய ஆளும் இனமான நாயக்கர் இனத்தையோ அல்லது முக்குலத்தோர் இனத்தில் முன் குடும்பமான  சேதுபதி குலத்தையோ சார்ந்தவர்கள் இல்லை .. இவர்கள் அன்றைய பாளைய அரசர்களின் முதல் சுற்றில் .. அதாவது நம்பிக்கை உரிய சேவை செய்பவர்களாக இருந்த சேர்வை என்னும் முக்குலத்தோர் குடியை சேர்ந்தவர்கள் ..

இதில் பெரிய மருது மற்றும் சின்ன மருது வேலுநாச்சியார் அரண்மனையில் மிருகங்களை பாரமரிக்கவும், வெற்றிலை அளிப்பவராகவும் பணி ஆற்றினர் ..

பெயர் காரணம்........

இவர்களது பூர்வீக ஊரான நையனார் கோவில் சிவபெருமான் மருதமரத்தடியில் வைத்து வணக்கப்பட்டதால் மருதப்பா என்று அழைக்கப்பட்டார் .. மருது சகோதர்கள் குடும்பம் சேர்வைக்காரன் என்கிற குலத்தை சேர்ந்ததாக இருப்பினும் தங்களது குல தெய்வமான சிவ பெருமான் பெயர் கொண்டு “மருது” என்கிற குடும்ப பெயருடன் விளங்கியது ..


நாம் போன பதிப்பில் பார்த்த ராஜா  (முத்து வடுக நாத பெரிய உடைய தேவர் ) 1773 ஆம் ஆண்டில் General Joseph Smith என்கிற கிழகத்திய கம்பெனி  அடிமை, ஆற்காடு நவாப்பிற்கு பணம் வாங்கி குடுக்க இவரை கொன்ற கதை படித்தோம் .. சிறு பெண் குழந்தையுடன் ராணி வேலுநாச்சியார் .. தனது பரிவாரங்களுடன் “விருபாட்சி” என்கிற ஊரில் தங்கி இருந்தார் சுமார் எட்டு ஆண்டுகள் .. பின்னர் 1781 மருது சகோதர்கள் தலைமையில் வேலுநாச்சியார் தனது சமஸ்தானத்தை ஆற்காடு நவாப் இடம் இருந்து சண்டையிட்டு திரும்பப்பெற்றர் ..

அவர் 1790 ஆம் ஆண்டு இறக்கும் வரை அதை திறம்பட ஆட்சியையும் புரிந்தார் என்பதே ஒரு அதிசய நிகழ்வுதான் .. அதற்க்கு பெரும் பங்கு ஆற்றியவர்கள் மருது சகோதர்களே ..

அவர்களே பெரும்பாலும் ஆட்சி செய்ததாக எல்லா பதிவுகளும் சொல்லுகின்றன .. வேலுநாச்சியார் பற்றி எந்த கிழக்கிந்திய கம்பெனி குறிப்புகளும் நான் கண்டவரை இல்லை..

1789 ஆண்டு
Colonel Stewartஎன்பவன் சிவகங்கை மீது படை எடுத்து மிரட்டல் விட்டான்  அப்போது மருது சகோதர்கள் சுமார் 40,000 ரூபாய்கள் குடுத்து சமாதானம் செய்து கொண்டனர் ..

 General James Welsh



இவர்களின் ஆட்சிகாலம் 1790 – 1801 வரை .. General Welsh என்பவர் மட்டும் இந்த மருது சகோதர்களை பற்றிய பல குறிப்புகளை எழுதி இருக்கிறார் ..


இவர்
Transferred in 1795 to the 9th Native Infantry at Mandura,
மதுரையில் இவர் இருந்தபோது வெள்ளை மருது என்று அழைக்கப்படுகின்ற பெரிய மருதுவின் நடப்பை புகழ்ந்து எழுதுகிறார் ..

சின்ன மருது ஆட்சிப்பொறுப்பில் இருந்தாதாகவும் , பெரிய மருது வேட்டை ஆடுவது, வீர விளையாட்டுகளில் ஆர்வம உள்ளவராக இருந்தமை பற்றி எழுதுகிறார் ..

அவர் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்ந்தமையும், பல ஐரோப்பியர் நடப்பை விரும்பி ஏற்றத்தையும் விளக்கி இருக்கிறார் .. அவர் திருச்சி, தஞ்சை மதுரை பகுதியில் வசித்த பல ஐரோப்பியர்களின் அன்பை பெற்று இருந்தாதயும், அப்போதெல்லாம் யாராகினும் புலி மற்றும் சிங்கம் வேட்டை யாட வேண்டும் என்றால் வெள்ளை மருதுவை அழைத்து வரச் செய்வது வழக்கம் என்று சொல்லுகிறார் ..

எப்போதும் தன்னுடன் சுமார் 500 நபர்களுடன் ஐரோப்பியர்களை கூடிக்கொண்டு வேட்டைக்கு செல்வதும் புலி வேட்டையில் அனைவரின் பாதுகாப்பிற்கு தனி அக்கறை காட்டுபவர் என்றும் புகழ்ந்து எழுதி இருக்கிறார் ..

புதிதாக வரும் ஆசாமிகளுக்கு தானே வேட்டை ஆட சிறிய பறவைகள் முதலியவைகளை பிடித்துக்காட்டி சொல்லித்தருவார் என்றும், தான் மதுரையில் இருக்கும் வரை பெரிய மருது பல வகை பழங்கள் (ஒரு வகை ஆரஞ்சு பழம் பற்றி எழுதி இருக்கிறார் ) வித விதமான பறவை முயல் போன்றவற்றை அனுப்புவர் என்று சொல்லி இருக்கிறார் ..

மேலும் மிக நீட்டமான ஒரு வகை ஈட்டியை எப்படி பயன்படுத்துவது என்று தனக்கு சொல்லிக் குடுத்ததையும் .. அவரால் ஆற்காடு காசை ஒரே கை விரலால் வளைத்து காட்டிய வலிமை பற்றியும் எழுதி யுள்ளார் ..

மருது சகோதர்கள் சிவகங்கை சமஸ்தானத்தின் அரசர்களாக இருப்பினும் அவர்கள் தங்கள் சொந்த ஊரான “சிறுவயல்” என்கிற ஊரில் அரண்மனை கட்டி வாழ்ந்தனர் ... அந்த ஊரின் பெயரை “சிறுவேலி” என்று மாற்றம் செய்து கொண்டனர் ..

அந்த ஊரின் வனப்பு மற்றும் சின்ன மருதுவின் ஆட்சி மேன்மை பற்றி அதை நேரில் கண்ட Welsh சொல்லுகிறார் ..

சின்னமருது கரிய நிறத்தவராக இருப்பினும் மிக அழகுடையவராக இருந்தார்.. மிக சுலபமாக அனுகக்கூடியவராக இருந்தார்.. அவர் ஆளுமைக்கு உட்பட்ட மக்களுக்கு அவரின் தலை அசைப்பு கடவுளின் ஆணையாக இருப்பினும் அவர் ஒரு திறந்த வீட்டில் வாழ்ந்தார்.. ஒரு காவலாளியை கூட காணவில்லை.. அங்கு வந்த அனைவரும் அவரை வாழ்த்தி விட்டு செல்வதை நான் கண்டேன் ..

ஒரு சாதாரண வழிப்போக்கனாக செல்லும் போது கண்ட அவர் என் நண்பராகி போனார் !! எனக்கு அரிசியும் பழங்களும் தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டு இருந்தார்

1801 ஆம் ஆண்டு நடைபெற்ற கடும் மோதலில் ..தப்பி ஓடிய மருது சகோதர்கள் தங்கள் கட்டிய அந்த அழகிய நகரை தீக்கு இரையாக்கி விட்டு சென்றனர் என்பது சரித்திர சோகம் ..

அந்த சண்டையே ஆங்கிலேயர்களை நேரடியாக தமிழகத்தைஆட்சிப் பொறுப்பை பெற வைத்தது ....

நாளை புலவர்கள் மருது சகோதர் பற்றிய பாடலை பார்ப்போம்!!!





Wednesday 8 October 2014

சிவகங்கை கதை - பாகம் 1

சிவகங்கையின் வீரர்களான மருது சகோதர்கள் பற்றிய சில குறிப்புகள்....மற்றும் அவர்களுக்கு எதிரானா ஐந்து மாத போரில் நடத்தவை நாள் குறிப்புகளாக (daily dairy ) என்னால் முன்பே வாசிக்கப்பட்டு , அவர்களுடன் நேரில் பழகிய Colonel Welsh, எழுதிய குறிப்புகள் ..

இவைகள் அனைத்தும் காளையார்கோவில் கோபுர நெருப்பு காட்சி என் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணி என்னை எழுத வைத்து விட்டது /







சினிமாவில் எப்பிடி கிராமத்து கதை என்றால் வயல்வெளி சிறு கோவில் காண்பித்து கதை ஆரம்பித்து சொல்வார்களோ அதே போல .. மருது சகோதர்கள் கதை சொல்வதற்கு முன் .. 18 நூற்றாண்டில் அரசியல் எப்படி இருந்தது என்று சொல்லிவிட்டு எழுதுவோம் ..

சரித்திரம் என்றாலே சேர சோழ பாண்டியர்கள் என்ற நாம் பழக்கப்பட்டு விட்டோம் .. ஆனால் அவங்கள் எல்லாம் 1200-1300 CE காலத்திலேயே காணமல் போய் விட்டாங்க .. விஜய நகர சாம்ராஜிய அரசர்கள் ஆண்ட போது அவர்கள் படை தளபதிகளாக இருந்த நாயக்கர்கள் .. மதுரை பாண்டிய ராஜா வாரிசு இல்லாததால் தாங்களே அரசர்களாக முடி சூட்டிக்கொண்டு .. அவர்கள் சொந்தக்காரகளை கும்பலாக கூட்டிகொண்டு வந்து அவர்களுக்கு பல இடங்களை தனி உரிமைகளாக ஆள அனுமதி அளித்து .. சண்டை வரும்போது படைபலம் (அப்போ ஆள் பலம் தேவை !!) அனுப்ப பணித்து ... உருவாக்கியவை .. பாளையங்கள் ...
(more likes districts with indipendant charge of collecting revenues and also raising their own army)

இப்படி உண்டான பாளையங்களில் ராமநாதபுரம் அரசும் உண்டு .. ஆயின இவர்கள் தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் ... இவர்கள் சேதுபதி என்று அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள் .. ராமர் கட்டிய பலத்தை காப்பவர்கள் என்று பொருள் படும் படியாக ..தமிழகத்திலே நாயக்கர் காலத்திற்கு முன்பே ஆண்டு வரும் அரச குடும்பம் இவர்களது ..

1540CE இல் நாயக மன்னர்களால் ஒரு சேதுபதி அரசன் கைது செய்யப்பட்டு ஸ்ரீரங்கத்தில் சிறை வைக்கப்பட்டான் .. முன்பெல்லாம் வட நாட்டு யாத்ரீகர்கள் ஸ்ரீரங்கம் வந்து விட்டு ராமநாதபுர அரசனை வணங்கி விட்டு ராமேஸ்வரம் செல்வார்கள் .. அந்த அரசன் ஸ்ரீரங்கத்தில் சிறை வைக்கப்பட்டு இருந்தமை தெரிந்ததால் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் தங்க ஆரம்பித்து விட்டனர் .. சுமார் 50-60000 பயணிகள் ஸ்ரீரங்கத்தில் தங்கினால் !! நாயக்க மன்னன சேதுபதி அரசனை விடுவித்து அவன் நாட்டுக்கு அனுப்பினான் என்று குறிப்புகள் சொல்லுகின்றன ..

இப்படி இருந்த ராமநாதபுர சமஸ்தானம் இரண்டாக பிரிந்து .. சிவகங்கை சமஸ்தானமாக உருவெடுத்தது ...

கிழவன் சேதுபதி (இவர் மிகப்புகழ் வாய்ந்த ராமநாத புர அரசன் ) சகோதரி மகன் ரகுநாத சேதுபதி .. இவரின் இன்னொரு மனைவின் மகன் (வெள்ளைக்கார பய எழுதறான் முறைதவறி பிறந்தவன் என்று ..அவர்களுக்கு அப்போ பலதார மணம் பற்றிய எண்ணம் அவ்வளவே ..இவைதான் ராமநாதபுர ராஜாவை அன்று  கிருத்துவனாக மாற்ற முடியவில்லை .. பலமண தார தடை இருந்த காலம்  ..அது அன்று குடிபடைகளை அதிகரிக்கும் .. அரசன் பல ஊர் குடிகளில் பெண் எடுத்து ஆள் பலம் சேர்க்க !! இதை பற்றி வேறு இடத்தில் பார்ப்போம் . 

பவானி சங்கர தேவன்..ஆரம்பித்து வைத்த சொத்து தகராறு .. சிவகங்கை தனி சமஸ்தானமாக பிரிந்தது ..

முத்துவடுகநாத பெரிய உடைய தேவர் .....இவர் ஆட்சி காலத்தில் .. மைசூர் திப்பு படைகள், அன்றைய முழு தமிழகத்தையும் ஆண்டு கொண்டு இருந்த ஆற்காடு நவாப் உடன் சண்டை இட்டுக்கொண்டு இருந்தன... இவர் திப்புவுடன் சேர்ந்து கொண்டு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்தார் .. விளைவு ..நவாப் அன்று ஆங்கிலேயருக்கு அடிமையாய் இருந்த நேரம் .. அவர்கள் துணை கொண்டு தேவரை பீரங்கியில் வைத்து சிதறி அடித்தனர் ...



   இவரின் மனைவியே வேலுநாச்சியார் ... இவர் தனது மகள் உடன் திருப்பாச்சி என்கிற ஊரில் ..திப்புவின் படைகள் ஆதரவுடன் இருக்க சென்ற போது அவர்கள் உடன் சென்றவர்களே .. மருது சகோதர்கள் ...

நாமும் இவர்களுடன் பயணத்தை தொடர்வோம் .....